Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    சுய உதவிக் குழு கடன்- SELF HELP GROUP LOAN



Amount கடன் தொகை

Rate of Interest வட்டி விகிதம்

Duration திரும்ப செலுத்தும் காலம்

10 Lacs

10%

180 Months





    சுய உதவிக்குழு கடன் வழங்க பெற வேண்டியது ( கிளையளவில்)



வரிசை எண்

விபரம்

1

சுய உதவிக்குழுக்களுக்கான தகுதி காண் தணிக்கை படிவம் 1 ( மகளிர் திட்டம் / TNSLRM பிரதிநிதி BDO / கிளை மேலாளர் சான்றொப்பம் செய்யலாம்)

2

சுய உதவிக்குழுக்களுக்கான தகுதிகாண் தணிக்கை படிவம் படிவம் II (Grading Test) ( மகளிர் திட்டம், கிளை மேலாளர் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்)

3

சுய உதவிக்குழுக்களுக்கான வரவு செலவு விபரம் ( கிளை மேலாளர் சான்றொப்பம், குழு ஊக்குநர், பிரதிநிதி சான்றொப்பம் பெறப்படவேண்டும்)

4

சுய உதவிக்குழு தொடர்பான விபரப்படிவம் ( ஊக்குநர், பிரதிநிதி கிளை மேலாளர் சான்றொப்பம் பெறப்படவேண்டும்)

5

குழு உறுப்பினர்களின் சேமிப்பு கடன் நிலுவை விபரம் ( ஊக்குநர், பிரதிநிதி கிளை மேலாளர் சான்றொப்பம் பெறப்படவேண்டும்).

6

குழு தீர்மானம் பெறப்பட வேண்டும். இத்தீர்மானத்தில் கடன் தொகையை உறுப்பினர் வாரியாக பிரித்து தீர்மானம் இயற்றி கிளை மேலாளர் மற்றும் ஊக்குநர், பிரதிநிதி சான்றொப்பம் பெறப்பட வேண்டும். தீர்மானம் மூன்று மாதங்களுக்குள் இருத்தல் வேண்டும்.

7

சுய உதவிக்குழு உறுப்பினர் தொடர்பான தனிநபர் விபரப்படிவம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை, ஆதார் கார்டு பெற்று அனைத்து காலங்களும் பூர்த்தி செய்து உறுப்பினர் கையொப்பம் பெற்று கிளை மேலாளர் சான்றொப்பம் பெறப்பட வேண்டும். குழு உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவில் இல்லை என உறுதி செய்துகொள்ள வேண்டும்..

8

குழு குரூப் போட்டோ A4 சைஸ் பெற்று கிளை மேலாளர் மற்றும் ஊக்குநர் பிரதிநிதி சான்றொப்பமிட வேண்டும்.

9

கிளை மேலாளர் பரிசீலனை படிவம் பெற்று அனைத்து காலங்களும் பூர்த்தி செய்து கிளை மேலாளர் கையொப்பமிட வேண்டும்.

10

குழு முதல் கடன் பெற்றால் சேமிப்பு கணக்கு statement பெற்று கோப்பில் இணைக்க வேண்டும். இரண்டாவது கடனாக இருந்தால் குழு ஏற்கனவே கடன் பெற்ற விபரம் Loan Statement மற்றும் சேமிப்பு Statement பெற்று கோப்பில் இணைக்க வேண்டும்,

11

உறுப்பினர் கடன் கோரும் படிவம் இணைக்கவேண்டும்.

12

ரேட்டிங்க் படிவத்தில் 120 க்கு 72 மதிப்பெண்ணுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

13

5.00 இலட்சத்திற்கு மேல் கடன் கோரும் குழுவிற்கு 120 க்கு 100 மதிப்பெண்ணுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.





    சுய உதவிக்குழு பெற வேண்டியது ( சங்க அளவில்)



வரிசை எண்

விபரம்

1

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தீர்மானம் ( தீர்மானம் இயற்றி மூன்று மாத காலத்திற்குள் இருத்தல் வேண்டும். சங்க தலைவர், இயக்குநர் இருவர் கையொப்பம் செயலர் மற்றும் சரக மேற்பார்வையாளர் கையொப்பம் பெற வேண்டும்)

2

சுய உதவிக்குழு தகுதிகாண் தர மதிப்பீடு படிவம் 1 ( மகளிர் திட்ட அலுவலர் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்)

3

சுய உதவிக்குழு தகுதிக்காண் தர மதிப்பீடு படிவம் II ( Grading Test) மகளிர் திட்ட அலுவலர், சங்க செயலர் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்)

4

சுய உதவிக்குழு தொடர்பான விபரப் படிவம் ( ஊக்குநர், பிரதிநிதி சான்றொப்பம் பெறப்படவேண்டும்)

5

சுய உதவிக்குழுக்களுக்கான வரவு செலவு விபரம் ( சங்க செயலர், ஊக்குநர், பிரதிநிதி சான்றொப்பம் பெறப்பட் வேண்டும்.)

6

குழு உறுப்பினர்களின் சேமிப்பு, உள்கடன் நிலுவை ( சங்க செயலர் சான்றொப்பம், ஊக்குநர், பிரதிநிதி சான்றொப்பம் பெறப்பட வேண்டும்)

7

குழு தீர்மானம் இயற்றி மூன்று மாதத்திற்குள் இருக்க வேண்டும். ( குழு உறுப்பினர்களின் கையொப்பம் சங்க செயலர் சான்றொர்ப்பம் மற்றும் ஊக்குநர், பிரதிநிதி சான்றொப்பமிட வேண்டும்)

8

குழு உறுப்பினர் தொடர்பான தனிநபர் விபர படிவம் (அனைத்து காலங்களுகம் பூர்த்தி செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் பார்டு, குடும்ப அட்டை பெற வேண்டும்)

9

கள மேலாளர் பரிசீலனை படிவம் ( அனைத்து காலங்களும் பூர்த்தி செய்து சரக மேற்பார்வையாளர் மற்றும் கள மேலாளர் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

10

குழு குரூப் போட்டோ ஏ4 சைஸ் பெற்று சங்க செயலர் மற்றும் ஊக்குநர் பிரதிநிதி சான்றொப்பமிட வேண்டும்

11

சங்கத்தின் RNC மற்றும் Balance sheet பெற்று சங்க செயலர் மற்றும் சரக மேற்பார்வையாளர் சான்றொப்பமிட வேண்டும்.

12

குழு உறுப்பினர் கடன் கோரும் படிவம் இணைக்கப்பட வேண்டும்.

13

முதல் கடனாக இருந்தால் சேமிப்பு account statement பெற்று கோப்பில் இணைக்க வேண்டும். இரண்டாவது கடனாக இருந்தால் Loan Account Statement மற்றும் Savings account statement பெற்று கோப்பில் இணைக்க வேண்டும்.

14

சங்க செயலர் பரிந்துரை கடிதம் இணைக்க வேண்டும்.

15

கிளை மேலாளர் பரிந்துரை செய்ய வேண்டும்.