Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    F A Q's





1.

என் மனைவிக்கு, அவளுக்கென்று தனியாக முகவரி சான்று இல்லாதபட்சத்தில் வங்கியில் கணக்குத் துவங்க முடியுமா?

துவங்க முடியும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் வீட்டு உபயோகத்திற்காக செலுத்திய சில கட்டண ரசீதுகள். வங்கி கணக்கை துவங்க நினைக்கும் நபரின் பெயரில் இல்லாதிருப்பது சகஜம்தான். ( நெருங்கிய உறவுகள் (உ.ம்) மனைவி, மகன், மகள், பெற்றோர்) வங்கி கணக்கை துவக்க முற்படுபவரின் அடையாள ஆவணம் மற்றும் அவருடன் வாழும் நெருங்கிய உறவினர் வீட்டு உபயோகத்திற்காக செலுத்திய கட்டண ரசீதும் வேண்டும். இதோடு அந்த நெருங்கிய உறவினர் கணக்குத் துவங்குபவர் தன்னோடு வசிப்பதாக ஒரு ஒப்புதல் கடிதம் கொடுக்க வேண்டும். கூடுதல் சான்றாக, வங்கி இந்த கடிதத்தை தபால் மூலம் கேட்கலாம்.

1.

நான் அன்றாடம் கூலி வாங்க்கும் தொழிலாளி. என்னிடம் வங்கி கேட்கும் அடையாள மற்றும் முகவரி சான்று இல்லை. வங்கி கணக்கு துவக்க விருப்பமாக உள்ளது. முடியுமா?

தனக்கென்று அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் இல்லாத, குறைந்த வருவாய் பிரிவை சார்ந்த வாடிக்கையாளர் வங்கியில் கணக்குத் துவங்கமுடியும். KYC நடைமுறைகளை பூர்த்தி செய்த ஒருவர் அளிக்கும் அறிமுகத்தின் மூலம் கணக்கு துவங்கலாம். கணக்கு துவங்குபவரின் கணக்கில் இருப்புத் தொகையாக ஓராண்டில் ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மொத்த கடன் தொகை ரூ1,00,000/-(ரூபாய் ஒரு லட்சம்) இவற்றிக்கு மேல் இருக்கக் கூடாது அறிமுகப்படுத்துபவரின் வங்கி கணக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முந்தையதாகவும் திருப்திகரமான பரிவர்த்தனைகளைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும். வாடிக்கையாளரின் புகைப்படம் மற்றும் அவரது முகவரி ஆகியவை அறிமுகப்படுத்துபவரால் ஒப்புதல் அல்லது வாடிக்கையாளரின் அடையாள மற்றும் முகவரி பற்றி வேறு சான்றுகள் இருந்தால் அவை வங்கியின் திருப்திக்கேற்றவாறு இருக்கவேண்டும். ஏதோ ஒரு சமயத்தில் அவன்/அவளது வங்கிக்கணக்கில் ( ஒட்டு மொத்தமாக) நிலுவையில் உள்ள தொகை ரூபாய் ஐம்பதாயிரத்தைத் (ரூ50,000) தாண்டினாலோ அல்லது கணக்கில் மொத்தக்கடன் தொகை ரூபாய் ஒரு லட்சத்தை (ரூ1,00,000) தாண்டினாலோ மேற்கொண்டு எந்த பரிவர்த்தனையையும் அனுமதிக்கமுடியாது. KYC நடைமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்த பிறகே தொடர்ந்து பரிவர்த்தனைகளை அனுமதிக்கமுடியும். வாடிக்கையாளருக்கு ஏற்படும் சங்கடத்தை தவிர்க்க வங்கி, வாடிக்கையாளரின் கணக்கில் ஓராண்டில் இருப்பு ரூ 40,000(ரூபாய் நாற்பதாயிரத்தை) தாண்டும்பொழுதும் அல்லது மொத்த கடன் தொகை ரூ80,000 ( ரூபாய் எண்பதாயிரத்தை) தாண்டும் பொழுதும் KYC நடைமுறைகளை பூர்த்தி செய்யாவிடில், கணக்கில் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.

1.

வங்கிக் கணக்கைத் துவங்குவதற்கு அடையாள மற்றும் முகவரி சான்றாக வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பெற்று வந்தால் அது ஒப்புக் கொள்ளப்படுமா?

அத்தகைய சான்றிதழ்களில் கையெழுத்திடும் நபர், அதற்குரிய அதிகாரம் படைத்தவரா என்பதில் திருப்தி அடையும் பட்சத்தில், புகழ் பெற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வரும் சான்றிதழ்களை வங்கிகள் ஏற்க தயாராக உள்ளன. எனினும் வங்கிகள் இது தவிர கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது KYC நோக்கங்களுக்கான இதர ரசீதுகள் போன்றவை நிறுவனங்களில் மற்றும் இதர அமைப்புகளில் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும்.

1.

KYC யின் கீழ் வங்கிக்கு அளிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக இருக்குமா?

ஆம். வங்கிக்கணக்கை திறக்கும்பொழுது வாடிக்கையாளர் அளிக்கும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இது போன்ற நோக்கத்திற்காவோ அல்லது ஏதேனும் நோக்கத்திற்காகவோ வெளியிடப்பட மாட்டாது.

1.

கடன் அட்டைகள் / பற்று அட்டைகள் / ஸ்மார்ட் அட்டைகள் போன்றவற்றிற்கு KYC நடைமுறைகள் பொருந்துமா?

ஆம். கடன் அட்டைகள் / பற்று அட்டைகள் / ஸ்மார்ட் அட்டைகள் மட்டுமின்றி அதன் இணைப்பு/கூடுதல் அட்டைகளுக்கும் KYC நடைமுறைகள் பொருந்தும்.

1.

KYC நடைமுறை சார்பாக வங்கியால் கேட்கப்பட்ட விவரங்களை நான் அளிக்க மறுத்தால், வங்கியால் என் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

கேட்கப்பட்ட விவரங்களை தர வாடிக்கையாளர் மறுத்தாலோ அல்லது ஒத்துழைக்கத் தயங்கினாலோ, இதனால் KYC நடைமுறைகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை வங்கிக்கு வரும்பொழுது, அத்தகைய வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கையும் வர்த்தக உறவையும் வங்கி துண்டித்துவிடும்.

Next Page .... Continuation