Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    சிறு தொழில் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

சிறு தொழில் கடன்

2.

கடன் தொகை (அதிக பட்சம்)

1) தளவாடம் மற்றும் நடைமுறை மூலதன கடனாக ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)
2) ஒருங்கிணைந்த சிறுதொழில் தொடங்குவதற்கு, தொழிலில் தன்மைக்கேற்ப ரூ10,00,000/-(ரூபாய் பத்து லட்சம் மட்டும்) வரை வழங்கலாம்.

3.

கடன் நோக்கம்

தேசிய வங்கி ( NABARD) ஒப்புதல் பெற்ற இத்துடன் இணைக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்ட தொழில்களுக்கு கடன் வழங்கலாம்

4.

தவணை காலம்

உயர்ந்த அளவாக ரூபாய் பத்து லட்சம் வரை உள்ள கடன் களுக்கு தொழிலின் தன்மைக்கு ஏற்ப முதல் தவணைக்கு இடைவெளிக்காலம் ( Moratorium Period) அனுமதிக்கப்படும்.

5.

விண்ணப்பதாரரின் தகுதி

1) கிராம கைவினைஞர்கள் மற்றும் குடிசைத்தொழில் முனைவோர்.
2) சிறுதொழில் செய்யும் தனி நபர்கள் ( Individuals)
3) தொழில் செய்யும் பங்குதாரர்கள் ( Partnership)
4) நிறுவனங்கள் ( Joint Stock Companies)
5) மருத்துவர்கள் ( Doctors)
6) பொறியாளர்கள் ( Engineers)

6.

இணை உறுப்பினர்

1) கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் ரூ5/-(ரூபாய் ஐந்து மட்டும்) செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்.
2) கடன் பெறுபவர் மற்றும் பிணையதாரர் வங்கியின் செயல் எல்லையில் வசிக்க வேண்டும்.
3) கடன் பெறுபவர் கணக்கு திறக்க வேண்டும்.

7.

விளிம்புத் தொகை ( Margin Money)

1) ரூ 1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) வரை உள்ள கடன் களுக்கு 5%
2) ரூ1,00,000/- துக்கு (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மேல் 10% வங்கியில் செலுத்த வேண்டும்

8.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1) அடமானம் கொடுப்பது நிலமாக (land) இருந்தால் மூலப்பத்திரம் (Original Document)
2) வீடாக இருந்தால் ( Housing Property)

a) பொறியாளர் மதிப்பீட்டு அறிக்கை ( Engineer valuation report)
b) 30 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்று ( Encumbrance certificate)
c) நடப்பு ஆண்டு வீட்டுத் தீர்வை செலுத்திய சீட்டு ( House Tax Receipt)
d) திட்ட அறிக்கை (Project Report)
e) மாவட்ட தொழில் மையத்தின் பதிவுச் சான்று ( Registration certificate)
f) ஆதார் அட்டை
g) முகவரி ஆதாரம் / அடையாள சான்று
h) புகைப்படம் ( பாஸ்போர்ட் சைஸ்) 3

9.

வட்டி விழுக்காடு

மறுநிதி கடன் களுக்கு
ரூ.25,000/- வரை 12%
ரூ 25,000/- துக்கு மேல் ரூ2/- லட்சம் வரை - 12%
ரூ 20,000/- துக்கு மேல் -12%

10.

சொந்த நிதியில் வழங்கும் கடன்

வட்டி 12%
வட்டி விகிதம் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளுக்கு உட்பட்டது

11.

பிணையம்

1) கடன் தொகையில் வாங்கப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்
2) கடன் தொகைக்கு இரண்டு மடங்கு மதிப்புக்கு அசையா சொத்து அடமானம்
3) 3வது நபர் , இணை உறுப்பினராக சேர்க்கப்பட்டு உறுதிமொழி பத்திரம் ( III party Guarntee) எழுதிக்கொடுக்க வேண்டும்.

12.

சட்ட ஆலோசகர் கட்டணம்

கடன் தொகையில் 1% குறைந்தது ரூ.500/- உச்ச அளவாக ரூ 2,500/- வரை பெறலாம் + GST

13.

காப்பீடு ( Insurance)

தொழிற்கூடம் - கடன் அளவுக்கு வங்கி பெயரிலும் கடன் பெற்றவர் பெயரிலும் இணைந்து (joint) காப்பீடு (Insurance) செய்யப்பட வேண்டும்.

14.

கடன் பட்டுவாடா செய்யும் முறை ( Mode of Disbursement)

1) மூலதனக்கடன் - இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கிய நிறுவனத்திற்கு விரைப்பட்டியலின்படி, நேரடியாக காசோலை அல்லது வரைவோலை வழங்கப்படும் ( Crossed Cheque or Draft)
2) நடைமுறை மூலதனக்கடன் ( Working capital loan) கடன் தொகை முழுவதுமாக அல்லது தவணைகளாக குறிப்பிட்ட நோக்கத்திற்கேற்ப வழங்கப்படும்.