Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    பிற்படுத்தப்பட்டோருக்குக் கடன்



1.

கடன் பெறுவதற்கு தகுதிகள்

1 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின வகுப்பினர்
2) குடும்பத்தின் ஆண்டு வருமானம் கிராமமாக இருந்தால் ரூ81,000/-த்திற்கும் நகரமாக இருந்தால் ரூ1,03,000/-த்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
3) கடன் மனுதாரர் 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
4) ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற தகுதியுள்ளவர்கள்.

2.

கடன் பெற தகுதியான தொழில்கள்

1) விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் (ஆழ்துளை கிணறு அமைத்தல்ம் இயந்திர கலப்பை வாங்குதல் மீன்பிடித்தல் மற்றூம் கறவை மாடுகள் வாங்குதல் போன்றவை)
2) சிறுவணிகம் கைவினைஞர் மற்றூம் மரபு சார்ந்த தொழில்கள் ( மளிகை, காய்கறி, பழங்கள் வியாபாரம், மருந்தகம் புத்தகக்கடை சிற்றுண்டியகம் முடிதிருத்தகம் அழகு நிலையம் தையல் நெசவு மற்றூம் கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையம் போன்றவை அமைத்தல்)
3) போக்குவரத்து மற்றும் சேவைப்பிரிவு ( ஆட்டோ ரிக்ஷா வாடகை சீருந்து இயக்குதல் தானியங்கி பழுதுபார்ப்பு நிலையம், மிதிவண்டி நிலையம், கணணி மையம் எலக்ட் ரிக் மற்றும் எலக்ட் ரானிக் பழுதுபார்க்கும் நிலையம், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை உணவகம் நிழற்பட நிலையம் நகலகம் போன்றவை அமைத்தல்)
4) தொழில் மற்றும் தொழில்நுட்ப வணிகம் / கல்வி தனி மருத்துவமனை உடற்பயிற்சி மருத்துவ மையம் வழக்கறிஞர் அலுவலகம் பட்டய கணக்காளர் அலுவலகம் போன்றவை அமைத்தல்)



    மத்திய காலக்கடன்



4.

கடன் திட்டங்கள்

கீழ்க்கண்ட பல்வேறு நோக்கங்களுக்கு கடன் கள் வழங்கப்ப்டுகின்றன.

மத்திய காலக்கடன் :

வருவாய் ஈட்டும் சிறுவணிகர் மரபு சார்ந்த தொழில்கள் போக்குவரத்து மற்றும் சேவைப்பிரிவு சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

1) கடன் தொகை :
உச்ச அளவுக்கடன் ரூ1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்)

2) கடன் வழங்கும் பங்கு :
a. தேசியக் கழகம் - 85%
b. டாப்செட்கோ / நிறுவனம் -10%
c. பயனாளி - 5%
d.மொத்தம் - 100%

5.

வட்டி விகிதம்

வட்டி விகிதம் 6% ( ஆறு விழுக்காடு)

6.

கடனின் காலம்

- 3 முதல் 5 ஆண்டுகள்

7.

திரும்ப செலுத்துதல்

: மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்



    கறவை மாடுகள் / ஏழு மாதங்களுக்கு ஒரு முறை



8.

II கறவை மாடுகள் / மூன்று மாதங்களுக்கு ஒரு முறை

1) மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தேர்வு செய்யும் சங்க உறுப்பினர்கள்
2) ஒரு உறுப்பினருக்கு 2 உயர் ரக கறவைமாடுகள்
3) ஜெர்சி போன்ற உயர் ரக கறவை மாடுகள் ஒன்று

9.

கடன் தொகை

- உச்ச அளவு ரூ 35,000/- ( இதில் மார்ஜின் தொகை ரூ.5,000/-)

10.

பரிந்துரை

பால் உற்பத்தியாள்ர் இணையம் (ஆவின்) சென்னை பரிந்துரையின் அடிப்படையில் வங்கியால் அனுமதிக்கப்படும்.

11.

கடன் அளவு

உச்ச கடன் அளவு ரூ 60,000/- (அறுபதாயிரம்)

12.

கடன் வழங்கும் பங்கு

1) தேசிய கழகத்தின் பங்கு - 85%
2) டாப்செட்கோ நிறுவனம் - 10%
3) பயனாளி - 5%

13.

வட்டி

வட்டி விகிதம் 6%
தவணை தவறிய வட்டி 2%

14.

கடன் காலம்

உச்ச அளவு 3 ஆண்டுகள்

15.

திரும்ப செலுத்தும் தவணை

- மூன்று மாதங்களுக்கு ஒருமுறை



    மகளிர் புதிய பொற்காலத்திட்டம்



16.

III மகளிர் புதிய பொற்காலத்திட்டம்

1) தொழில் தொடங்குவதற்கு பெண்களூக்கு கடன் வழங்கப்படும்
2) திட்ட மதிப்பீட்டில் 100 விழுக்காடும் கடனாக அனுமதிக்கப்படுகிறது.

17.

கடன் வழங்கும் நிறுவன பங்கு

தேசிய கழகத்தின் பங்கு - 95%
டாப்செட்கோ நிறுவனம் - 5%
பயனாளி - இல்லை
மொத்தம் - 100%

18.

வட்டி

வட்டி விகிதம் 5%

19.

கடன் காலம்

3 முதல் 5 ஆண்டுகள்

20.

திரும்ப செலுத்துதல்

மூன்று மாதங்களூக்கு ஒருமுறை கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

21.

வட்டி

- வட்டி விகிதம் 5% விழுக்காடு .



    தொழில் மற்றும் தொழில் நுட்பக்கல்வி (SAKSHAM)



22.

IV தொழில் மற்றும் தொழில் நுட்பக் கல்வி

இக்கடன் இளம் பட்டதாரிகளூக்கு வேலைவாய்ப்புக்காக வழங்கப்படுகிறது .

23.

தகுதி உள்ளவர்கள்

மருத்துவம் பொறியியல் சட்டம் பட்டய கணக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வியியல் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.

24.

திட்ட மதிப்பீடு

திட்ட மதிப்பீட்டில் 95% விழுக்காடு கடனாக அனுமதிக்கப்படுகிறது.

25.

கடன் அளவு

உச்ச கடன் அளவு ரூ10,00,000/- ( பத்து லட்சம்)

26.

கடன் பங்கு

1) தேசிய கழகத்தின் பங்கு 15%
2) டாப்செட்கோ நிறுவனம் 10%
3) பயனாளி பங்கு 5%
மொத்தம் 100%

27.

வட்டி விகிதம்

ரூ5,00,000/- ( ரூபாய் ஐந்து லட்சம்) வரை 6%
ரூ.5,00,000/- ( ரூபாய் ஐந்து லட்சத்திற்கு மேல் 8%

28.

கடன் காலம்

10 ( பத்து ஆண்டுகள்)

29.

தவணை செலுத்துதல்

கடன் தவணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை



    மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் சுயதொழில் (SHIPSAMPADA)



30.

V மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் சுய தொழில்

1) மரபுசார் கலைஞர்கள் கைவினைஞர்கள் கணிணி மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை வடிவமைக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க மற்றூம் சுயதொழில் தொடங்க இக்கடன் வழங்கப்படுகிறது.

31.

கடன் அளவு

உச்ச கடன் அளவு ரூ10,00,000/- (பத்து லட்சம்)

32.

கடன் பங்கு

1.தேசிய கழகத்தின் பங்கு 85%
2. டாப்செட்கோ நிறுவனம் 10%
3) பயனாளி பங்கு 5%
மொத்தம் 100%

33.

வட்டி விகிதம்

ரூ 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) வரை 6%
ரூ 5,00,000/- ( ரூபாய் ஐந்து லட்சத்திற்கு மேல் ) 8%

34.

கடன் காலம்

10 ஆண்டுகள்

35.

தவணை செலுத்துதல்

கடன் தவணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை





    ஆண் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன்



42.

VII ஆண் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன்

1) ஆண் சுய உதவிக்குழுவுக்கு அல்லது உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு ரூ50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) வரை உச்ச அளவாக கடன் வழங்கலாம்.
2) ஒரு குழுவுக்கு உச்ச அளவாக ரூ10,00,000/- (ரூபாய் பத்து லட்சம்) வரை கடன் வழங்கலாம்.

43.

கடன் பங்கு

1) தேசிய கழகத்தின் பங்கு 85%
2) டாப்செட்கோ நிறுவனம் 10%
3. பயனாளி பங்கு 5%
மொத்தம் 100%

44.

வட்டி

வட்டி விகிதம் 5%

45.

திரும்ப செலுத்தும் காலம்

மாதாந்திர அல்லது காலாண்டு தவணை



    பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் ( மகிளா சம்ரிதி யோஜனா)



46.

VIII பெண்கள் சுய உதவிக்குழுக்குக் கடன் ( மகிளா சம்ரிதி யோஜனா)

இத்திட்டத்தின் படி பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அல்லது குழு உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது.

47.

கடன் பங்கு

1) தேசிய கழகத்தின் பங்கு 95%
2) டாப்செட்கோ நிறுவனம் 5%
மொத்தம் 100%

48.

வட்டி விகிதம்

வட்டி விகிதம் 4%

49.

திரும்ப செலுத்தும் காலம்

3 ஆண்டுகள்

50.

தவணை செலுத்துதல்

மாதாந்திர மற்றும் காலாண்டு தவணைகள்



    சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோர் ( KRISHI SAMPADA)



51.

IX சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோர்

பயிர்கள்

1) ராபி மற்றும் காரிப்பருவம் பயிர்கள்
2) பணப்பயிர்கள்
3) காய்கறி பயிரிடுவோர்

உச்ச அளவுக்கடன் ரூ50,000/- ( ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)

51.

கடன் வழங்கும் பங்கு

1. தேசிய கழகத்தின் பங்கு 95%
2. டாப்செட்கோ நிறுவனம் 5%
மொத்தம் பங்கு 100%

52.

வட்டி

வட்டி விகிதம் 4%

53.

திரும்ப செலுத்தும் காலம்

4 ஆண்டுகள்

54.

திரும்ப செலுத்தும் தவணை

மூன்று மாதங்களூக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.



    டாப்செட்கோ கடன் திட்டம்



55.

X டாப்செட்கோ கடன் திட்டம்

1) நோக்கம் : கார் வேன், மினிவேன், டிராக்டர்/டிரெய்லர்( விவசாயத் தொழிலுக்கு) போன்ற வாகனங்களுக்கு கடன் வழங்கலாம். டாப்செட்கோ நிறூவனம் இக்கடனை வழங்குகிறது.

56.

உச்ச அளவு கடன்

கடன் அளவு ரூ3.13 லட்சம் ( மூன்றூ லட்சத்து பதிமூன்றாயிரம்)

57.

வட்டி

வட்டி விகிதம் 10%

57.

கடனின் காலம்

கடனின் காலம் 5 ஆண்டுகள்

58.

திரும்ப செலுத்தும் தவணை

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.



    சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குக் கடன்



59.

XI சிறு மற்றும் குறு விவசாயிகளூக்கு கடன்

1) நோக்கம் : நீர்பாசன வசதி செய்வதற்காக மானியத்துடன் இக்கடன் வழங்கப்படுகிறது.

60.

தகுதியுடையவர்கள்

கீழ்க்கண்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்

1) பிற்படுத்தப்பட்டோர்
2) மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
3) சீர் மரபினர்

இவ்வகுப்பை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்ப்பாசன வசதி ஏற்படுதுவதற்கு கடன் வழங்கப்படுகிறது.

61.

மானியம்

வங்கி கடனுக்கு இணையாக 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது, அரசின் மானியம் அதிக அளவாக நபர் ஒன்றுக்கு ரூ50,000/- ( ரூபாய் ஐம்பதாயிரம்) வழங்கப்படும்.

62.

விண்ணப்பிக்கும் முறை

1) கடன் விண்ணப்பங்களை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் வேளாண்மைக்கூட்டுறவுச் சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
2) ஆவின் திட்டத்தின் கீழ் கடன் பெற கடன் மனுவை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

வட்டி : வங்கி நிர்ணயித்துள்ள வட்டி விகிதம்

62.

தேவைப்படும் ஆவணங்கள்

1) வகுப்பு வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றிதழ்
2) குடும்ப அட்டை
3) முன்னணி நிறுவனத்திலிருந்து விலைப்பட்டியல்
4) திட்ட அறிக்கை ( பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்)
5) ஓட்டுநர் உரிமம் ( வாகன் போக்குவரத்துக் கடன் பெறுவதாக இருந்தால்)
6) கல்விக்கடன் பெறுவதற்கு கல்லூரி சேர்க்கை ஒதுக்கீடு ஆணை மாணவர் என்பதற்கான சான்று செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் அடங்கிய கடிதம்
7) கடன் வழங்கும் வங்கி கேட்கும் இதர ஆவணங்கள்.

63.

கடன் அனுமதிக்கும் முறை

1) கடன் மனு வங்கியால் பரிசீலனை செய்யப்பட்டு திட்ட செயல்பாடு தன்மை கடனை திரும்ப செலுத்தும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் படிவம் "அ" வில் பரிந்துரை செய்து மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.
2) இக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மனுக்கல் பரிசீலிக்கப்பட்டு வங்கியால் கடனை அனுமதிக்கப்படும். வங்கிகளின் விதிமுறைகளுக்குட்பட்டு டாப்செட்கோவின் கடன் உதவி வழங்கப்படும். தவணை தவறிய அசல் மற்றூம் வட்டிக்கு டாப்செட்கோ நிர்ணயித்த தவணை தவறிய வட்டி வசூலிக்கப்படும்.

டாப்செட்கோவின் கடன் கீழ்க்கண்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

1. மத்தியக் கூட்டுறவு வங்கி
2. நகரக்கூட்டுறவு வங்கி
3. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
4. தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் பட்டியலில் காட்டப்பட்ட வங்கிகள்